தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வானது வருகிற 18-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.38-ஆக உயர்வு. எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44ல் இருந்து ரூ.47-ஆக உயர்வு. கொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.