திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஜவஹர்லால் மேற்பார்வையில் 55 மருத்துவ குழுவைக் கொண்டு 144 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. நாளை முதல் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ஒரு டோஸ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் இருந்து 55 மருத்துவ குழுவினர், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து 33 மருத்துவ குழுவினர் மற்றும் 440 பணியாளர்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஈடுபட்டு வருகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal