தமிழக அரசியல் களத்தில் அவலங்களை அவ்வப்போது இலக்கிய நடையில் நகைச்சுவை கலந்து, அனைவரின் சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதுபவர்தான் மருது அழகுராஜ்! தமிழகத்தின் தலைநகரை தாக்கிய ‘மக்ஜம்’ புயல் குறித்தும் அவர் எழுதியிருக்கிறார்.

அதாவது, ‘‘மாண்புமிகு முதல்வருக்கு…

மழை புயல் மீட்பு பணிகளில் நெருக்கடியா ஓ.பி.எஸ்ஸிடம் கலந்து பேசுங்கள்…

அவர் சுனாமி, வர்தா புயல், பேரிடர் பெருவெள்ளம், கஜாபுயல் என மீட்பு நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் கொண்டவர்…

கடலில் எண்ணெய் கலந்து விட்டதா கலக்கம் வேண்டாம்… ஓ.பி.எஸ் ஸிடம் உடனே பேசுங்கள்…

எண்ணூர் திருவெற்றியூர் பகுதிகளில் ஏற்பட்ட எண்ணைய் கசிவு அபாயத்தை எதிர்கொண்டு பெரு வெற்றி கண்டவர்…

மாநில உரிமைகளை மீட்க வேண்டுமா ஓ.பி.எஸ்ஸிடம் ஆலோசனை செய்யுங்கள்..

அவர் ஒன்பது வருடங்கள் பூட்டிக்கிடந்த வாடி வாசல்களை எழுபத்திரண்டு மணி நேரத்தில் திறந்துவிட்டு எல்லோரையும் திகைக்க வைத்தவர்…

அண்டை மாநிலங்களின் உறவை மேம்படுத்த வேண்டுமா ஒருகனம் ஓ.பி.எஸ்ஸிடம் பேசிப் பாருங்கள்…

சிறை பிடிக்கப்பட்ட கிருஷ்ணா நீரை ஆந்திராவுக்கே சென்று அழைத்து வந்தவர்..

ஆம்..

ஓ.பி எஸ் எனும் மூன்றெழுத்து அனுபவங்களின் பொக்கிஷம் அன்னைத் தமிழ் மண்ணுக்கு பெரியகுளம் தந்த பெரிய பலம்..

பின் குறிப்பு..

சத்தியமா இது அரசியல் நோக்கமற்ற பதிவு…’’ என்று தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal