பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஒவ்வொரு மாநில தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் இன்று கார்கேவை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு
ஆகியவை பற்றி விவாதித்து இருக்கிறார்கள். கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
நேற்று மாலையில் கார்கேவின் 50 ஆண்டுகால தேர்தல் அரசியல் பற்றிய புத்தகத்தை சோனியா காந்தி வெளியிட்டார். அந்த புத்தக பிரதிகளை தமிழக காங்கிரஸ்
தலைவர் கே.எஸ்.அழகிரி, சிறுபான்மை துறை தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்டோருக்கு கார்கே வழங்கியுள்ளார். இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரமும் கார்கேவை தனியாக சந்தித்து பேசி உள்ளார்.