தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக விருப்பப்படுகிறேன் என கார்த்திக் சிதம்பரம் எம்பி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி பண்ணை வீட்டில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் நேற்று தனது 53-வது பிறந்த நாளை கட்சித் தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘தமிழகத்தில் ‘இண்டியா’ கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் காங்கிரஸ், திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். மகாராஷ்டிரா, பிஹாரில் ‘இண்டியா’ கூட்டணி உறுதியாக உள்ளது. சில மாநிலங்களில் சில சிக்கல்கள் இருக்கின்றன. தற்போதைய 5 மாநில தேர்தல் முடிவுக்குப் பின் பேச்சுவார்த்தை மூலம் கூட்டணி உறுதி செய்யப்படும்.

5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கணிசமாக வெற்றிபெறும். ரெய்டு என்பது தேவையில்லாத விஷயம். அளவுக்கு அதிகமாகச் சொத்து வைத்து இருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்யலாம். ரெய்டு என்பது ஊடகங்க ளுக்காகவும் தொலைக்காட்சிக்காகவும் நடத்தப்படும் ‘ஷோ’ தான். எனக்கு பிசிசிஐ தலைவராகும் வாய்ப்பெல்லாம் கிடையாது, ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக விருப்பப்படுகிறேன். நான் விரும்பும் பதவி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிதான்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal