ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். சுருவில் உள்ள தாரா நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதற்காக புறப்பட்டார். அப்போது பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். பதில் அளித்த ராகுல் காந்தி “நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். ஒற்றுமையாக இருப்போம். ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெறும்” என்றார்.

ராகுல் காந்தியுடன் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் தோதசரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் செல்கின்றனர். ராகுல் காந்தி ஹனுமான்கார்ஹ், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பேரணியில் கலந்த கொள்ள இருக்கிறார். ராஜஸ்தானில் பொதுவாக காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் மாறிமாறிதான் ஆட்சியை பிடித்துள்ளன. இந்த முறை தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal