மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு அமமுகவினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு டி.டி.வி.தினகரன் ஆயத்தமாகிவிட்டார் என்கிறார்கள் அ.ம.மு.க.வினர்.

அமமுக மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவர் கோபால் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், கட்சி வளர்ச்சி மற்றும் மக்களவைத் தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் டிடிவி.தினகரன் பேசும்போது, “வரும் மக்களவைத் தேர்தலுக்கு அமமுகவினர் தற்போது இருந்தே தயாராக வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் விரைவில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், சிறப்பாக கட்சிப் பணியாற்றவேண்டும்” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal