எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை அவ்வப்போது தோலுரித்துக் காட்டும் ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், தற்போது ஆளும் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

அதாவது பத்தாண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து ‘உயர்வான ஆட்சி’ நடத்திக் கொண்டிருப்பதாக தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.

இதே மருது அழகுராஜின் பதிவு அப்படியே…

‘‘ உயர்வான ஆட்சி!’’

பால் விலை
உயர்வு

பஸ் கட்டணம்
உயர்வு

சொத்துவரி
உயர்வு

அரிசி விலை
உயர்வு

வீடு கட்ட
அப்ரூவல் கட்டணம் உயர்வு

மின் கட்டணம்
உயர்வு

அத்தியாவசிய
பொருட்கள்
அனைத்தின்
விலையும் உயர்வு…

ஆக இது தான்

உயர்வான
ஆட்சி
என்பதாக்கும்

என்ன நாஞ்
சொல்றது….’’ என்று முடித்திருக்கிறார்.

தி.மு.க.வின் ‘உயர்வான ஆட்சி’யில் உடன் பிறப்புக்களே அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது வேறுவிஷயம்..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal