கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயாக்கோட்டை சாலை நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் நாகராசன் இவரது மகன் ஜெயக்குமார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இன்ஸ்டாகிராமை தொடர்பு கொண்டு பின்பற்றினால் அதிக அளவில் பணம் சம்பதிகலாம். மேலும் இதில் பகுதி நேரமாக வேலை பார்த்தாலும் அதிக சம்பளம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து அதில் இருந்த தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு ஜெயக்குமார் பேசியுள்ளார். அப்போது அதில் பேசிய மர்ம நபர் ஒரு வங்கி கணக்கை கொடுத்து அதில் பணம் செலுத்த சொல்லியுள்ளார். அதன்படி ரூ. 14.50 லட்சம் பணத்தை வங்கி கணக்கில் ஜெயக்குமார் செலுத்தி உள்ளார். அதன் பிறகு அந்த சேல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயக்குமார் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதே போன்று ஓசூர் ராயாக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் தேவி (வயது 26) இவர் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 15-ந் தேதி வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தியில் கூகுள் மேப்பில் ரேட்டிங் போடும் வேலையில் பணியாற்ற முதலீடு செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பி அதில் இருந்த செல்போன் எண்ணில் பேசிய தேவி அவரிடம் பேசிய  நபர் செலுத்த சொன்ன வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார் . ஆனால் முடியிவில்லை.

இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் தேவி புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal