கடந்த 2017&ம் ஆண்டு கந்துவட்டி கேட்டு மிரட்டியதை அடுத்து பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது சிறையில் அடைத்ததோடு, அவர்கள் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்தது. இந்த நிலையில்தான் மீண்டும் ஆவண மோசடியில் ககன் போத்ராவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

பிரபல சினிமா பைனான்சியர் எஸ்.முகுந்சந்த் போத்ரா. இவர், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கஸ்தூரி ராஜா மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதையடுத்து போத்ரா, தன்னை மிரட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் புகார் கூறியிருந்தார். பைனான்சியர் போத்ரா மீது மிரட்டி பணம் பறித்த புகாரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கு பைனான்சியர் போத்ராம் ரூ.15 லட்சம் கடன் கொடுத்துவிட்டு, அவர் பணத்தை திருப்பி கட்டிய பிறகும் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியிருக்கிறார். தவிர, ஓட்டல் உரிமையாளர் செந்தில் கணபதி என்பவர், போத்ராவின் மகன்கள் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தான் ரூ.1.40 கோடி, போத்ராவிடம் வாங்கியதாகவும், இதுவரை 2 கோடி ரூபாய் வரை செலுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, முகுந்த் சந்த் போத்ரா மற்றும் அவரது மகன்கள் ககன் போத்ரா, சந்தீப்போத்ராவை கைது செய்து சிறையில் அடைத்ததோடு, அவர்கள் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்தது.

இந்த நிலையில்தான் சென்னை தி.நகரில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை மோசடி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற முகுந்த் சந்த் போத்ராவின் மகன் ககன் போத்ராவை நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதாவது, தி.நகர், விஜயராகவா ரோட்டில் உள்ள பாலமணிக்கு சொந்தமான பங்களா வீட்டை மாதம் ரூ.1.80 லட்சம் வீதம் வாடகை ஒப்பந்தம் பேசி முகுன்த் சந்த் போத்ரா குடும்பத்துடன் குடியிருந்தார். 2019 ம் ஆண்டு முகுன்சந்த் போத்ரா இறந்து விட்டார்.

இந்த நிலையில்தான் முகுன்சந்த் போத்ராவின் மகன் ககன் சந்த் போத்ரா, எப்படியாவது பங்களாகவை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ.6 கோடிக்கு போலியான ஒப்பந்தப் பத்திரத்தை தயார் செய்திருக்கிறார். அதில் பாலாமணி கையெழுத்திட்டது போன்றும், அதில் பாலாமணிக்கு ரூ.6 கோடி அவரது தந்தை கொடுத்தது போன்றும் போலியான குத்தகை ஒப்பந்த பத்திரத்தை தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

இது குறித்து பாலாமணியன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில்தான் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் இந்த புகார் தொடர்பாக விசாரிக்கும், போலி ஆவணம் தயாரித்தது நிரூபணமானதால் தலைமறைவாக இருந்த ககன் சந்த் போத்ராவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே குண்டாஸில் இருந்து வெளியே வந்த ககன் சந்த் போத்ரா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சில வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால், அவர் மீது மீண்டும் குண்டாஸ் பாயலாம்! அடுத்தடுத்து ககன் போத்ராவால் பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்திற்கு செல்லத் தயாராகி வருகிறார்களாம்!

போலி ஆவணங்கள் மூலம் நீதிமன்றத்தையே ஏமாற்ற நினைக்கும் ககன் போத்ராவிற்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என காத்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal