நெல்லையில் தி.மு.க மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி பாளை கே.டி.சி நகரில் உள்ள மாதா மாளிகையில் இன்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய
மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1,062 மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் பொற்கிழிகளை வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- கடந்த 2½ ஆண்டுகளில் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதையும், சொல்லாததையும் அவர் செய்துவருகிறார். ஆட்சி பொறுப்பேற்றவுடன் முத்தான பல திட்டங்கள் முதல்-அமைச்சரால் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களுக்கும் முத்தாய்ப்பான திட்டமாக கலைஞர் நூற்றாண்டில் அண்ணா பிறந்த நாளில் மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மிசா சட்டத்தால் பலர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையின்போது முன்னாள் முதல்-அமைச்சரை சந்திக்க காவல்துறையினரால் தடுக்கப்பட்ட போதும் அனைத்தையும் மீறி சுற்றுலா செல்வதாக கூறி நேரில் வந்து கருணாநிதியை சந்தித்தவர்கள் இப்போது உள்ள தி.மு.க மூத்த முன்னோடிகள். கழகத்தின் வரலாறு தொண்டர்கள் தான். பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் மறு உருவங்களை உங்களில் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.














By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal