சின்னமனூரில் தேனி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜக்கையன் தலைமையில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூத் கமிட்டி அமைக்கும் பணியை எவ்வாறு அமைக்க வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் பிச்சைகனி முன்னிலையில் கட்சியில் இணைத்துக்
கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மதிவாணன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.