இந்தாண்டு பசும்பொன் தேவர் குருபூஜை விழா களைகட்ட ஆரம்பித்து விட்டது. காரணம் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், தேவர் சமுதாய வாக்குகளை அப்படியே அள்ளுவதற்கு அனைத்துக் கட்சிகளும் களத்தில் இறங்கியிருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவது உறுதியாகிவிட்டது. டெல்லி மேலிடத்தில் இருந்து பி.ஜே.பி.யின் முக்கிய புள்ளியும் வருவது உறுதியாகவிட்டது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு பசும்பொன் தேவர் குருபூஜை பரிதாபத்தை ஏற்படுத்தியிருப்பதாக, ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், ‘‘சாதி பேதமற்ற இயக்கமான அண்ணா தி.மு.க.வை சாதிச் சங்களின் கூட்டமைப்பாக மாற்றிய பாவத்தை செய்தது எடப்பாடி தான்.

இதன் விளைவே இன்று முதலமைச்சராக இருந்த அவர் பசும்பொன் தேவர் குரூபூஜைக்கு வரலாமா வேண்டாமா..?-

அப்படியே வந்தாலும் அதி காலையிலேயே ஆட்கள் கூடுவதற்கு முன்பாகவே தலையை காட்டிவிட்டு தப்பித்து வந்து விடலாமா..?

இல்லை… தலைக்கு ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்து போகலாமா என்னும் அளவில் பயந்து நடுங்கும் பரிதாபச் சூழல் எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கிறது’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

பசும்பொன் தேவர் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமி வந்தால், எதிர்ப்பு தெரிவிக்கவும் ஒரு குரூப் தயாராகி வருவதாகவும் தகவல்கள் கசிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal