‘என் மனைவி கோயிலுக்கு செல்வது அவருடைய தனிப்பட்ட விருப்பம், அதை நான் தடுக்க விரும்பவில்லை’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் ‘‘பாராட்டுகளை போல விமர்சனங்களையும் நான் விரும்புகிறேன். விமர்சனங்களில் தனிப்பட்ட நலனை விட பொதுநலன்தான் அதிகம் இருக்கும்.

என் மனைவி கோயிலுக்கு செல்வது அவரது தனிப்பட்ட விருப்பமாகும். அதை தடுக்க நான் விரும்பவில்லை’’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் முதல்வர், இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்ல மறுப்பது ஏன்? என்ற கேள்வியையும் வழிபாட்டாளர்கள் தொடர்ந்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கும் முதல்வர் மனம் திறப்பாரா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal