அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வாதங்கள் நிறைவுபெற்ற நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அப்போது, ஜாமின் வழங்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மருத்துவ காரணங்களை ஏற்க முடியாது. அவரது சகோதரர் இன்னும் தலைமறைவாக இருக்கும் நிலையில் ஜாமின் வழங்க இயலாது என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.