தேனி மேற்கு மாவட்டத்துக்கு புதிதாக அ.தி.மு.க. நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். மாவட்ட அவை தலைவராக கணேசன், இணை
செயலாளராக முத்துரத்தினம், துணை செயலாளர்களாக வீரமணி கர்ணன், சற்குணம், மாவட்ட பொருளாளராக, இளையநம்பி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, வக்கீல் பிரிவு, சிறுபான்மை பிரிவு என பல்வேறு பிரிவுகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.