‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் அன்னாசி பழம் அல்வா சாப்பிடுகிறார். மட்டன் பிரியானி சாப்பிட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்’ என்றெல்லாம் வதந்திகள் வந்துகொண்டிருந்தன. இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜி சிறையில் எப்படி இருக்கிறார்? என்பது குறித்து தயாரிப்பாளரும் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ரூ.16 கோடி மோசடி தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ரவீந்தர். இவர் ஒரு மாதம் சிறையில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் சிறையில் இருந்த போது தான பட்ட கஷ்டங்களை எல்லாம் விவரித்து வருகிறார். அந்த வகையில் அவர் கூறுகையில், ‘‘என் அம்மாவுக்கு பிறகு மகாலட்சுமிதான் எனக்கு கிடைத்த வரம். என்னிடம் இருந்து அவரை யாராலும் பிரிக்க முடியாது.

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட போது எப்படி உட்காருவ, எப்படி எழுந்திருப்ப என மகாலட்சுமி என்னிடம் கேட்ட கேள்வியால் நான் அப்படியே நொறுங்கி போய்ட்டேன். ஜெயிலுக்கு போனதும் அந்த எவ்ளோ பெரிய கேட்! அதை திறந்ததும் எனக்கு அப்படியே வியர்த்து விறுவிறுத்துவிட்டது.

பின்னர் என்னை உள்ளே அழைத்து சென்று மொத்த உடையையும் கழற்றிவிட்டு சோதனை செய்தார்கள். நான் டிராக் பேண்ட் அணிந்திருந்தேன். அதில் இருந்த நாடாவை உருவிவிட்டார்கள். சிறை கைதிகள் அந்த சிறிய பொருளை வைத்து கூட தங்களை துன்புறுத்தி கொள்ளக் கூடாது என்பதற்காக அவர்களுடைய கடமையை செய்தார்கள். அப்போதே நான் கூனி குறுகிவிட்டேன். போலீஸ்காரர்களும் சற்று சங்கடத்துடன்தான் இருந்தார்கள்.

பின்னர் உள்ளே அழைத்துச் சென்ற போது ஜெயிலர் என்னுடைய மருத்துவ பரிசோதனையை கேட்டார். அதை அந்த போலீஸார் எடுக்கவில்லை. உடனே ஜெயிலர் இப்போதே இவருக்கு வியர்த்துள்ளது. இப்பவே பிபி எடுத்தால் எகிறிதான் காண்பிக்கும். அதனால் சற்று நிதானப்படுத்தி எடுத்தபுக் கொண்டு வாருங்கள் என்றார். அதன்படி இரவு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற நான் அதிகாலை 4 மணிக்கு அழைத்து வரப்பட்டேன்.

சார் மீண்டும் என் ஆடைகளை சோதனை செய்ய போறீங்களா என கேட்டேன். இல்லை என்றார்கள். பின்னர் எனக்கு ஒதுக்கப்பட்ட சிறைக்கு செல்ல ஒன்றரை கி.மீ. தூரம் நடந்தே அழைத்து சென்றார்கள். இதுவரை நான் அவ்வளவு தூரம் எல்லாம் நடந்ததே கிடையாது. ஒரு வழியாக நடந்து சென்று எனக்கான அறைக்குச் சென்றுவிட்டேன். அங்கு இந்தியன் டைப் டாய்லெட்டில் உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். இதற்காக 2, 3 பேரை அழைத்தேன். பிறகு அவர்களுக்கு எதற்கு சிரமம் என கருதி நானே தவழ்ந்து தவழ்ந்து நடக்க ஆரம்பித்தேன். எனக்கு சிறப்பு வசதிகள் கிடைக்காமல் போனதற்கு என்னுடைய எதிர் தரப்புதான் காரணம்.

எல்லா பிரபலங்களுக்கும் சிறையில் எல்லா வசதிகளும் கிடைக்கும்னு சொல்வது தவறு. செந்தில் பாலாஜி சாருக்கு புஹாரியில் இருந்து பிரியாணி வருது, அது வருது இது வருதுனு வெளியே பேசிக்கிறாங்க! ஆனால் அவர் ரொம்ப எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். மத்தவங்க ஜெயில்ல என்ன சாப்பிடுகிறார்களோ அதைத்தான் அவரும் சாப்பிடுகிறார். அதுவும் உப்பு சப்பு இல்லாமல் சாப்பிடுகிறார்.

என் தலைவன் டிடிஎஃப் வாசன் சிறைக்குள் வந்ததும் ஜெயிலே கதறுது. குருநாதா இங்கயுமாங்கிற மாதிரி கையில் கட்டோட வந்தார். அவரை தனி சிறையில்தான் வச்சிருந்தாங்க. அங்கயும் போலீஸ்காரர்களை வா செல்லம், போ செல்லம் என சொல்லிகிட்டு இருக்காரு, பைக்கை எரிச்சிடனும்னு நீதிபதி தீர்ப்பு சொன்னதும் உள்ளே இருக்கும் கைதிகள் எல்லாம் கோலாகலமா கொண்டாடுறாங்க’’ என ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்திருந்தார்.

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவன் ரவீந்தர், செந்தில் பாலாஜி பற்றி பேசியிருப்பது உண்மையா? அல்லது ஆளுந்தரப்பு ‘கண்டிப்போடு’ நடந்துகொள்கிறது என வெளியில் செய்தியை பரப்பிவிடவா? அல்லது ஆளுந்தரப்பிற்கு ஆதரவாக பேசினால், ‘நல்லது நடக்கும்’ என்பதற்காக என பல்வேறு கோணங்களில் இந்த விவகாரத்தை அலசி ஆராய்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal