அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை அனுமதிக்கக்கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறையும், அரசு வழக்கறிர்களும் வாதிட்ட நிலையில், இந்த வழக்கில் தங்களை இணைக்க வேண்டியதன் அவசியத்தை அமலாக்கத்துறை எடுத்துரைத்தது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துதாக ரூபாய் 6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களை இணைக்க கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இன்று (11ம் தேதி) அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் (இன்று) 11ம் தேதி நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி ரமேஷ், ‘அனிதாராதா கிருஷ்ணன் அமைச்சராக இருப்பதால் தங்களை இந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும்’ என மாவட்ட முதன்மை நீதிபதி செல்வத்திடம் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைத்துனர்.

‘அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு 90 சதவீதம் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் அமலாக்கத்துறையின் மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டாம்’ என லஞ்ச ஒழிப்புத் துறையினரும், அரசு வழக்கறிஞர்கள் தரப்பிலும் வாதங்களை எடுத்து வைத்தனர்.

இந்த விசாரணையானது சுமார் 50 நிமிடம் நடைபெற்ற விவாதங்கள் நிறைவு பொறாதை தொடர்ந்து வரும் நவம்பர் 1ம் தேதிக்கு விசாரணையை முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் ஒத்திவைத்தார். அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் ரமேஷ், அமலாக்கத்துறை துணை இயக்குனர் கார்த்திக், லஞ்ச ஒழிப்பு துறை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சுதா, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வழக்கறிஞர் மனோகரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்ற அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அப்படி அமலாக்கத்துறை உள்ளே நுழையும் பட்சத்தில் அனிதா ராதாகிருஷ்ணனின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal