கைலாசாவின் ஒட்டுமொத்த பவரையும் தன்னுடன் ‘நெருக்கமாக’ இருந்த நடிகை ரஞ்சிதாவிற்கு நித்தியானந்தா கொடுத்ததால் கைலாசாவில் ‘கலாட்டா’ பூமியாக மாறியிருக்கிறது.

இந்தியாவில் இருந்து தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கிய போலிச் சாமியார் நித்தியானந்தா, தற்போது அந்நாட்டுக்கு முன்னாள் நடிகையும் தனது சிஷ்யையுமான ரஞ்சிதாவை பிரதமராக நியமித்திருக்கிறார். இது அவரது சிஷ்யைகள் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2010ஆம் ஆண்டு போலிச் சாமியார் நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் இருக்கும் காட்சிகள் வெளியாகி பரப்பானது. பின்னர் 2012ஆம் ஆண்டு செய்தியாளர் சந்திப்பில் நிருபர்களைத் தாக்கியதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்த அவரது ஆசிரமம் மூடப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் ஜாமீன் பெற்றபின் தலைமறைவான நித்தியானந்தா 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வெளியாடுகளுக்குத் தப்பி ஓடினார். திடீரென கைலாசா என்ற தனது சொந்த நாட்டில் இருப்பதாக கதை அளந்துகொண்டு, அங்கு தன் சிஷ்யைகளுடன் ஏகபோகத்துடன் வசிக்கத் தொடங்கினார்.

கைலாசா நாட்டின் சார்பில் தன் சிஷ்யைகளை ஐ.நா. சபை நடத்தும் மாநாட்டுகளுக்கு அனுப்புவது, அமெரிக்காவுடன் கைலாசா பெயரில் ஒப்பந்தம் போடுவது என்று அடுத்தடுத்து அப்டேட் கொடுத்துக்கொண்டிருந்தார் நித்தியானந்தா. அவ்வப்போது லைவ் வீடியோவில் தோன்றி உபதேசங்களை பொழிவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

தன்னை சாமியார் என்று சொல்லிக்கொண்டு சிஷ்யைகளுடன் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்துகொண்டிருந்த நித்தியானந்தா, சமீபகாலமாக தானே கடவுள் என்றும் கூறிவருகிறார். அவ்வப்போது அவர் பேசும் பேச்சுகள் வெளியாக சமூக வலைத்தளங்களில் கிண்டலையும் கண்டனங்களையும் பெற்று வருகின்றன.

இந்நிலையில், தற்போது வந்திருக்கும் அப்டேட் ஒன்று நித்தியானந்தா தனது கைலாசா நாட்டுக்கு ரஞ்சிதாவை பிரதமராக அறிவித்திருப்பதாகக் கூறுகிறது. ஆனால், ரஞ்சிதாவை பிரதமராக நியமித்ததில் அவரது சிஷ்யைகளுக்கு கடும் அதிருப்தியாக இருக்கிறதாம். போதாக்குறைக்கு ரஞ்சிதாவும் நித்தியைப்போல லைவ் வீடியோவில் வந்து பேசத் தொடங்கியிருக்கிறார். இந்தக் கொடுமையைத் தாங்கமுடியாத மற்ற சிஷ்யைகள் ரஞ்சிதாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்களாம்.

பல வருஷங்களுக்கு முன்னால் வெளியான அந்த வீடியோ மூலம் தான் பேமஸ் ஆவதற்குக் காரணமான ரஞ்சிதாவுக்கு பிரதமர் பதவியைக் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார். இவ்வளவு நாள் பணிவிடைகள் செய்துவந்த ரஞ்சிதாவை பிரதமாராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நித்தியானந்தாவிடம் இருக்கும் பவர் எல்லாம் ரஞ்சிதா கைக்கு மாறுவதை பொறுக்க முடியாது என்றும் சிஷ்யைகள் கொந்தளிக்கிறார்களாம். இந்த சிஷ்யைகளுக்கு சரியான பதில் சொல்ல முடியாமல், தன் கற்பனை தேசத்தில் உல்லாச வாழ்க்கையை அனுபவிக்கவும் முடியாமல், சங்கடத்தில் இருக்கிறாராம் நித்தியானந்தா.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal