இந்து கோவில்களை தமிழக அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் பிடியில் கோவில்கள் சுரண்டப்படுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு இருப்பது மிக சரியே. கோவில்கள் நமது வழிபாட்டுக்கான இடம். சுரண்டலுக்கான இடம் அல்ல. தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும் வரை ஓயமாட்டோம்.

தருமபுரம் ஆதீனம் சார்பாக இலவச மருத்துவமனை அமைக்க வழங்கப்பட்ட 2 ஏக்கர் இடத்தையும் அதில் இருந்த மருத்துவமனை கட்டிடத்தையும் பராமரிக்காமல் விட்டு விட்டனர். தற்போது மீண்டும் ஆஸ்பத்திரி தொடங்க ஆதீனம் சார்பாக கேட்டும் வழங்கவில்லை. கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிக்கும் அராஜகத்தை நிறுத்திக் கொண்டு ஆதீனத்திடம் வழங்க வேண்டும். மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இல்லையென்றால் தருமபுரம் ஆதீனத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal