அதிமுக பாஜக இடையிலான மோதல் முடிவிற்கு வந்துள்ளது. இணைபிரியாத நண்பர்களாக தமிழ்நாடு அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் உச்சத்தில் இருந்த அதிமுக – பாஜக தங்கள் உறவை முறித்துக்கொண்டது.

அதிமுகவின் டாப் தலைவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து இந்த கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி இனி கிடையாது. பாஜகவுடன் 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுகவின் கூட்டணியை நம்பி பாஜகவின் டாப் தலைவர்கள் சிலர் இருந்தனர். முக்கியமாக பாஜக அதிமுக கூட்டணி இருந்தால் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் எம்பி ஆக முடியும் என்ற கனவில் பாஜகவினர் இருந்தனர். அதிலும் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் பாஜக நிர்வாகி ஒருவர். அதேபோல் பாஜகவில் முன்பு பதவிகளில் இருந்த மூத்த தலைவர் ஒருவர். ஏற்கனவே எம்பி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஒருவர் என்று 3 தலைவர்கள் அதிமுக கூட்டணியில் இருந்தால் எம்பி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர்.

அதாவது அதிமுகவின் வாக்கு வங்கியை பயன்படுத்தி எம்பி ஆகிவிட முடியும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்துள்ளனர். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ஒன்றிரண்டு எம்பி இடமாவது கிடைக்கும் என்று என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர். ஆனால் அதிமுக தற்போது கூட்டணியை முறித்து உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி கிடையாது. 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்று அதிமுக அறிவித்துவிட்டது.

இதன் காரணமாக பாஜகவை சேர்ந்த டாப் தலைவர்கள் சிலர் விரைவில் டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சிலர் ஏற்கனவே டெல்லிக்கு பறந்துவிட்டதாகவும் பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி தமிழக பா.ஜ.க.வில் உள்ள மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், அதிமுக உடன் கூட்டணியை எப்படியாவது சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் இருந்து பாஜகவிற்கு கிடைக்கும் இடங்கள் ஜீரோ ஆகிவிடும். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் இருந்தால்தான் தேர்தல் பணிகளை செய்ய முடியும். பாஜக மட்டும் தனியாக தேர்தல் பணிகளை செய்ய முடியாது.

அதோடு பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பூத் கமிட்டி கூட இல்லை. அதிமுக உடன் கூட்டணி இருந்தால் மட்டுமே லோக்சபா தேர்தலில் பணிகளை செய்ய முடியும்.. தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக இடையே மோதல் நடக்க சில தலைவர்கள்தான் காரணம். அந்த தலைவர்கள் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டும். அப்போதுதான் பாஜக சரியாகும்.

பாஜகவிற்கு உள்ளேயே சில தலைவர்களுக்கு இடையே மோதல் உள்ளது. கூட்டணியை சரி செய்வதற்கு இடையில் அதையும் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சில தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர்! மேலிடம் அண்ணாமலைக்கு மீண்டும் மீண்டும் முட்டுக்கொடுத்தால், தமிழகத்தில் பா.ஜ.க.பின் நிலை அதலபாதாளத்திற்கு சென்றுவிடும்’’ என்றனர்.

கர்நாடகாவில் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த அண்ணாமலை, எதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தாரோ… விரைவில் அந்த ‘வேலைக்கே’ சென்றுவிடுவார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal