பாண்டிச்சேரி மாநிலத்தில் பாஜக மாநில தலைவராக லாஸ்பேட்டையை சேர்ந்த வி.சாமிநாதன் இருந்து வந்தார். இவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் புதுவை மாநில பாஜக தலைவராக இருந்து வருகிறார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கு அந்த கட்சியின் மேலிடம் முயன்று வருகிறது. ஆனால் அங்கு பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸின் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

எனவே வரும் காலங்களில் புதுவை மாநிலத்தில் அதிரடி அரசியலை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்காக தற்போது தலைவராக உள்ள சாமிநாதன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் செல்வ கணபதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி.யை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பு உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal