தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையுடன் ஜனவரி மாதம் தொடங்கும். இதனை அடுத்து தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு மானிய கோரிக்கை தொடர்பான விவாதமும் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை கூட்டம் நடந்து முடிவடைந்த நிலையில், ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டும் என்பது ஒரு மரபு உள்ளது.

அதன்படி இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளரை சந்தித்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவெடுக்கும் எனவம் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal