அண்ணா குறித்து பா.ஜ.க. தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து கூறியதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விமர்சனங்களை முன் வைத்த நிலையில் பா.ஜ.க. வை விமர்சிக்க வேண்டாம் என தலைமை கழகம் அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பா.ஜ.க. தலைமைக்கு எதிராக அ.தி.மு.க.வினர் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். பா.ஜ.க.வை பற்றியோ கூட்டணி தொடர்பாகவோ அ.தி.மு.க.வினர் பேச வேண்டாம். கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள, நிலையில் வேறு யாரும் பொது வெளியில் பேசக்கூடாது.

கட்சி நிர்வாகிகள் பொது வெளியில் கூட்டணி, பா.ஜ.க. குறித்து பேசினால் குழப்பம் ஏற்படுத்தும். போஸ்டர் ஒட்டுவது, சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பதையும் தவிர்க்கவேண்டும்’’ என மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal