தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை செய்து வருகின்றனர். செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் தமிழ்நாட்டில் மணல் குவாரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடந்ததாகப் பல புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை, திண்டுக்கல் எனப் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனையில் இறங்கினர்.

ஆனால் இந்த ரெய்டுக்கு பின் உண்மையில் குறி வைக்கப்பட்டது யார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இரண்டு அமைச்சர்களை குறி வைத்து ரெய்டு நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுக்க இருக்கும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடந்தது. அதன்படி தமிழ்நாட்டின் முக்கிய மணல் குவாரி அதிபராக உள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டில் இறங்கினர். விரைவில் இந்த ரெய்டு தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் நிதி பின்புலத்தை முடக்குவதே இந்த ரெய்டின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை செய்து வருகின்றனர். செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை செய்து வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை செய்கின்றனர். செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரி சோதனை நடக்கிறது. செந்தில் பாலாஜியின் உதவியாளர் காசி தேனாம்பேட்டையில் வசித்து வருகிறார். தேனாம்பேட்டையில் உள்ள காசி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

அதன்படி இந்த ரெய்டில் வீணான பாட்டிலை சேகரிக்கும் அனுமதி பெற்றவர்கள் முதல் டாஸ்மாக் தொடர்பான பணிகளில் இருக்கும் பலர் குறி வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. டாஸ்மாக் டெண்டர் எடுத்தவர்கள், வீணான பாட்டிலை சேகரிக்கும் அனுமதி டெண்டர் பெற்றவர்கள், பார் டெண்டர் பெற்றவர்கள் ஆகியோர் ரெய்டுக்கு உள்ளாக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவிற்கு மணல் மூலம் பணம் வருகிறது. அதை முடக்கிவிட்டோம்… இனி டாஸ்மாக் மூலமாக திமுக மாவட்ட நிர்வாகிகள் சிலர் பெறும் நிதியை கட் செய்து லோக்சபா தேர்தலுக்கு முன்பாக முடக்குவதுதான் நோக்கம் என்கிறார்கள்.

இதுதவிர மணல் ரெய்டுகள் பின்னணியில் கூடவே இருக்கும் இளம் தலைமுறை நிர்வாகிகளின் உளவு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள்தான் சீனியர்களை அந்தந்த மாவட்டங்களில் தட்டி வைக்க மத்திய அமைப்புகளுக்கு உளவு தந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் சீனியர்கள் பலர் இந்த ரெய்டில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மணல் ரெய்டு மூலம் சீனியர் அமைச்சர்கள், நிர்வாகிகள் சிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழவும் இதுவே காரணமாக எதிர்கட்சிகளால் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ. வருமாண வரித்துறை என மூன்றும் தங்கள் பார்வையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal