ஜெயலலிதாவின் வாரிசு ‘நான் தான்’ அடித்துக் கூறிவரும் ஜெ.ஜெயலட்சுமி, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்திருப்பதுதான், தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறியபடி வலம்வரும் ஜெ.ஜெயலட்சுமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

‘‘ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான். சோபன்பாபு எனது தந்தை. எனது தாயாரை பல காரணங்களுக்காக நான் சந்திக்கவில்லை. அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது 2 முறை சந்தித்துள்ளேன். கடைசியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஒரு முறை சந்தித்தேன். நடிகையாக இருந்தபோது போயஸ்கார்டன் வீட்டில் வசித்துள்ளேன். அவர் எழுதிய டைரி என்னிடம் உள்ளது.

மேலும் அவர் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் என்வசம் உள்ளன. பல காரணங்களுக்காக நான் வெளிப்படையாக அவரது மகள் என்று என்னை அடையாயப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா மகள் என்பதற்காக டி.என்.ஏ டெஸ்ட் உள்ளிட்டவற்றை நீதிமன்றத்தில் அளிக்க தயாராக உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளேன். ‘அகில இந்திய எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம்’ என்பது எனது புதிய கட்சியின் பெயராகும்.

கட்சியின் சின்னம் இரட்டைரோஜா. இரட்டை இலைக்கு பதிலாக அல்லது போட்டியாக இரட்டை ரோஜா சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காகத்தான் கொடைக்கானல் வந்துள்ளேன். எம்.பி தேர்தலில் 39 தொகுதிகளிலும் எனது கட்சி போட்டியிடும். ஆனால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது.

எனது அம்மா ஜெயலலிதாவின் ஆசை மற்றும் கனவுகளை நிறைவேற்றுவதற்காகவே புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுகிறேன். எனது கட்சியின் கொள்கையே எனது அம்மாவின் ஆசைதான். ஜெயலலிதாவின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. பலர் இதற்கு காரணமாகவும் உள்ளனர்’’ இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அவரது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும் மலைகிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சோதனை மேல் சோதனை… என்ற பாடல் வரிகள் யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ எடப்பாடியாருக்கு நன்கு பொருந்தும்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal