‘என்னைக் கேட்காமலேயே என் விவகாரத்தில் வீடியோவை விஜயலட்சுமி வெளியிட்டால், சீமானுடன் சமரசம் அடைவேன்’ என்ற தொனியில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் நடிகை விஜயலட்சுமி!

2008-ம் ஆண்டு மதுரையில் சீமான் தம்மை திருமணம் செய்து கொண்டார்; பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் மதுரை ஹோட்டலில் சாந்தி முகூர்த்தம் நடந்தது. 3 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின் சீமான் ஏமாற்றிவிட்டார் என்பது நடிகை விஜயலட்சுமியின் புகார். இது தொடர்பாக 2011-ம் ஆண்டு சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

அப்போது சீமான் – விஜயலட்சுமி இருதரப்பும் சமாதானமான நிலையில் புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார். இதன் பின்னர் சீமான் மீது பல்வேறு புகார்களை வீடியோ பதிவுகள் மூலம் கூறி வந்தார் விஜயலட்சுமி. சென்னையில் தங்கியிருந்த போது தற்கொலைக்கும் விஜயலட்சுமி முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் சென்ற விஜயலட்சுமி, சீமானை பழிவாங்குவதாக வீடியோ பதிவிட்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் மீண்டும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சீமான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தார் எனவும் விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இதனால் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் முதல் சம்மன் அனுப்பி இருந்தனர். அப்போது, கட்சிப் பணிகள் அதிகமாக இருப்பதால் தமக்கு ஆஜராக நேரம் இல்லை என கூறியிருந்தார். பின்னர் சீமான் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, அவர் கொடுத்த கடிதங்களை வழங்கினர். அதில், தம் மீதான புகார்கள் குறித்து விளக்கம் கொடுத்தால் ஆஜராக தயாராக இருக்கிறேன் என சீமான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்ப போலீசார் சென்றனர். அப்போது சீமான் தரப்பில் சம்மனை வாங்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பின்னர் வழக்கறிஞர் மூலம் பெற்றுக்கொண்டார். மேலும் வரும் 18 ஆம் தேதி நேரில் ஆஜராவதாக கூறிய சீமான், விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், தான் விசாரணைக்கு ஆஜராகும் போது விஜயலட்சுமியும் வீரலட்சுமியும் விசாரணைக்கு வர வேண்டும் என்றும், மூன்று பேரிடமும் ஒன்றாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சீமான் நிபந்தனை விதித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், இது குறித்து பேசிய தமிழர் முன்னேற்றபடை தலைவரான வீரலட்சுமி, விசாரணைக்கு வர தயார் என்றும் இந்த வழக்கில் சீமானின் மனைவி கயல்விழியும் தேன்மொழி என்ற பெண்ணும் விசாரணைக்கு ஆஜரானால் தானும் விஜயலட்சுமியும் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறோம்” என்றார்.
இந்த நிலையில் தான் வீரலட்சுமியின் இந்த பேச்சுக்கு விஜயலட்சுமி கடும் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார். விஜயலட்சுமி இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- சீமான் சொல்லியிருக்கிறார்.. விஜயலட்சுமியையும் வீர லட்சுமியையும் வர சொல்லுங்க என்று.. இதற்கு வீரலட்சுமி ஒரு பதில் வீடியோ போடுறாங்க. அதில், நீங்க (சீமான்) வரும் போது கயல்விழியையும் தேன்மொழியையும் கூப்பிட்டுட்டு வாங்க.. நான் வீரலட்சுமியிடம் கேட்கிறேன். இந்த மாதிரி நான் பேசப்போகிறேன்… என என்னிடம் டிஸ்கஸ் பண்ணீங்களா.. நீங்க இஷ்டத்துக்கு சீமானை எதிர்த்து போயிக்கொண்டு இருந்தீங்கன்னா.. நான் இந்த கேஸில் எதுக்கு…. நான் 18 ஆம் தேதி சீமானை சந்திக்கும் அவரிடம் சமதானம் ஆகிவிட்டு பெங்களூரு கிளம்பி போயிடட்டுமா? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.. எல்லாரும். இது என்னோட கேஸா இல்லை இல்லை உங்க உங்களோட பெர்சனல் கேஸா..?

வர வரமாட்டேன் என்று சொல்லிட்டு இருந்தவர் 18 ஆம் தேதி வரப்போறார்தானே.. அப்போ இது என்ன புது ட்விஸ்ட்..கயல்விழியை கூப்டு வாங்க, தேன்மொழியை கூப்டு வாங்க என்றால்.. என்ன உங்க இஷ்டத்திற்கு பண்ணிட்டு போய்ட்டு இருக்கீங்க.. நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். என் கிட்ட கேட்காமல் கேட்காமல் வீர லட்சுமி அவுங்க ரூட்டில் போயிட்டே இருக்காங்க… எனக்கு இதில் உடன்பாடு இல்லை. எனக்கு சீமானை நேரில் பார்த்தால் நிறைய ஆதங்கம் இருக்கிறது.. நான் சீமான் 18 ஆம்தேதி வர்றேன் என்று சொல்வதை பார்த்து நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். வீர லட்சுமி என்னிடம் கேட்காமல் கேட்காமல் ஸ்டேட்மண்ட் ரிலீஸ் வெளியிட்டுட்டு இருந்தால் யாராவது இந்த கேஸை வைத்து விளையாடிட்டு இருந்தால்.. சீமானிடமும் நாம் தமிழர் கட்சியிடமும் சொல்லிவிட்டு நான் பெங்களூர் கிளம்பி போயிட்டே இருப்பேன். இது பெரிய எச்சரிக்கையாய் கொடுக்கிறேன். என்னையை வைத்து யாரும் பிளே பண்ணிட்டு இருக்காதீங்க… இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal