தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி “சனாதனம்” பற்றி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அமைச்சர் பொன்முடி ஆகியோரும் சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர். சனாதனம் பற்றிய பேச்சுகளுக்கு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சனாதனத்துக்கு எதிராக தி.மு.க. பேசி வருவதற்கு சோனியாவும், ராகுலும் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஜே.பி.நட்டா வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது. சனாதனத்தின் மீது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வெறுப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal