மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
மகளிர் அணி சார்பில் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி எம்.பி., பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலைஞர்கள் தமிழகத்திற்கு ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளை நினைவு கூர்ந்து வருகிறார்.
இந்த நிலையில்தான், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில் மகளிர் அணி சார்பில் முன்னெடுக்கும் கலைஞர் 100 வினாடி வினா போட்டி முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என முதல்வர் மு.க.ஸ்டாலின் மனதாரப் பாராட்டியிருக்கிறார்.
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை கனிமொழி எம்.பி., அவர்கள் ஏற்கனவே சிறப்புற நடத்தினார். கனிமொழியைப் பொறுத்தளவில் தான் முன்னின்று நடத்தும் நிகழ்ச்சியை எந்தளவிற்கு சிறப்புற நடத்த முடியுமோ, அந்தளவிற்கு நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.