தமிழக மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ வேதாரண்யம் மீனவர்கள் 11 பேர் ஆறுகாட்டுத் துறை கடற்கரையில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றபோது அங்கு வந்த இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை ஆயுதங்களால் தாக்கி அவர்களிடம் இருந்த பொருட்களை பறித்து சென்றுள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், படகுகள் சேதம், படகுகளை கைப்பற்றுவதுமாக இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

ஆனால் தற்பொழுது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது மிகுந்த கவலையளிக்கிறது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாதவாறு இந்திய கடற்படையும், இலங்கை கடற்படையும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்’’இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal