பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன்மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம், நேற்று ஆகிய இரண்டு நாட்கள் விவாதங்கள் நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடி இன்று பதில் உரை வழங்குகிறார். அப்போது ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாராளுமன்ற மக்களவை 11 மணிக்கு கூடும் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, பியூஷ்கோயல், அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோடன் அரசின் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினார். இன்று மதியம் வரை விவாதங்கள் நடைபெற்ற பின் பிரதமர் மோடி மாலை 4 மணியளவில் பதில் உரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், எதிர்க்கட்சிகள் தலைவர்கள் மாநிலங்களவையில் எடுத்தது வைக்கும் விவாதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal