முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. அமைதி பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றனர். பேரணியில் ஏராளமான தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

முதலமைச்சர் தலைமையில் 1 கி.மீ. தூரம் அமைதி பேரணியாக சென்று, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இதையடுத்து அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal