திருச்சி மாவட்டம் துறையூரில் அரசாணை பின்பற்றாமல் விடப்பட்ட டெண்டர்களுக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்ததோது, திருச்சி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

அரசு ஊரக வளர்ச்சித்துறை மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தி வருகீறது. இந்த திட்டத்தின் கீழ் அடிப்படை மற்றும் வளர்ச்சிப் பணிகள் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

இந்த திட்டத்தில் பணிகள் தேர்வு செய்ய, டெண்டர் விட, அனுமதி வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், சம்பந்தப்பட்ட கவுன்சிலர், சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று அரசாணை 81ல் உத்தரவிட்டுள்ளது.

துறையூர் ஒன்றியத்தில் 8 ஊராட்சியில் 55 பணிகள் செய்ய ஜூலை 11&ல் டெண்டர் விட அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டர் ரத்து செய்து ண்டும் ஜூலை 13ல் முறைகேடாக டெண்டர் விடப்பட்டது. இது குறித்து கவுடன்சிலர்கள் அசோகன், சிவக்குமார், லலிதா, சின்னம்மாள் ஆகியோர் திருச்சி கலெக்டரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுத்த வலியுறுத்தினர். இதன் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு திட்ட இயக்குநர் ஜூலை 24&ல் உதவி திட்ட அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கவுன்சிலர் சிவக்குமார் மதுரை ஐகோர்ட்டில், திருச்சி கலெக்டர், திட்ட இயக்குநர், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு எதிராக மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மதுரை உயர்நீதிமன்றம், திருச்சி கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் தர நோட்டீஸ் அனுப்பியதோடு, டெண்டர் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றி துறையூர் மற்றும் உப்பிலியபுரகும் பகுதியில் உள்ள கவுன்சிலர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், பூனைக்கு யார் மணி கட்டுவது என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். அதற்கு துறையூர் கவுன்சிலர்கள் மணி கட்டிவிட்டார்கள். அதாவது, ªண்டர் பணிகள் குறித்து ஒன்றிய சேர்மன்கள் ( பெண்ணாக இருந்தால் கணவன் மார்கள்) ஒன்றிய மற்றும் மாவட்டக் கவுன்சிலர்களை மதிக்காமல், அவர்களிடம் எந்தவொரு ஆலோசனையும் கேட்பதில்லை. தலைவர்களுக்கு மட்டும் சில ஆயிரங்களை கொடுத்துவிட்டு, மொத்த கமிஷனையும் சேர்மன்களே சுருட்டி விடுகின்றனர்.

சம்பந்தப்பட்ட ஏரியா ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலருக்குக் கூட என்ன வேலை நடக்கிறது என்று தெரியாது. ஆனால், ஆனால், சேர்மன்கள் செய்துவிடுவார்கள். தற்போது திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிக்கு மட்டும் இந்த தடை வந்திருக்கிறது. இது தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள மற்ற ஒன்றியங்களிலும் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் பணிகள் தரமாக நடக்கும்’’ என்றனர்.

ஆக மொத்தத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை சேர்மன்களுக்கும், வட்டார வளர்ச்சி அதிகாரிக்கும் ‘செக்’ வைத்து கவுன்சிலர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தி..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal