ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை என்ற அண்ணாமலையின் பேச்சால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் எகிறி இருக்கிறது. அண்ணாமலை எப்போதும் இப்படித்தான். அவர் அ.தி.மு.க.வில் குழப்பம் நீடித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். பா.ஜனதா மேலிட தலைவர்கள் நம்மிடம் நல்லாத்தான் இருக்கிறார்கள். ஆனால் இங்கு அண்ணாமலை தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று தனக்கு நெருக்க மானவர்களிடம் கூறி ஆதங்கப்பட்டுள்ளார். மேலும் நடைபயண தொடக்க விழாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு பேசியதாக எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே தான் அமித்ஷா கூட்டத்தில் பங்கேற்காமல் தனது சார்பில் ஆர்.பி.உதயகுமாரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்கள் மாவட்டத்துக்கு நடைபயணம் வரும் போது கூட்டணி தர்மத்துக்காக அண்ணாமலையை வாழ்த்தலாமா? என்று மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்கள். அதற்கு வேண்டாம் என்று வாய் வழியாக உத்தரவிட்டுள்ளார். அதனால்தான் எந்த மாவட்டத்திலும் அ.தி.மு.க.வினர் வர வேற்கவில்லை.