‘நான் இந்நேரம் எங்கேயோ இருப்பேன்… குடிப் பழக்கத்தால் என் வளர்ச்சி பாதித்தது! எனவே தயவு செய்து குடிப்பழக்கத்தை கைவிடுங்கள்’ என்று நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் பட ஆடியோ ரீலியில் பேசியிருப்பதுதான் பலரை சிந்திக்க வைத்திருக்கிறது.

உலக அளவில் ஃபேமஸாக இருப்பவர், தன்னுடைய இமேஜைக் கூட பார்க்காமல், ‘நான் குடித்ததால் என் வளர்ச்சி பாதித்தது. தயவு செய்து யாரும் குடிக்க வேண்டாம்’ என பேசியிருப்பதுதான் பிரபலங்களையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

இது பற்றி நடிகர் ரஜினிகாந்த்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

‘‘சார், நடிகர் ரஜினிகாந்த் நல்ல திறமையானவர். தன்னுடைய உழைப்பால் மட்டுமே உயர்ந்தவர். அவருடைய ஒவ்வொரு வியர்வைக்கு ஒரு பவுன் தங்கம் கொடுத்தது தமிழ்நாடு என்று அவரே ஒரு பாடலில் தெளிவு படுத்தியிருப்பார். பிறப்பால் கன்னடனாக இருந்தாலும், அவர் தமிழ்ப் பால் குடித்து வளர்ந்தவர்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு சிகரெட் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் நெடுநாட்களாக இருந்தது. அவர் திரையுலகின் உச்சத்தில் இருந்தபோது கூட மதுப்பழக்கத்தை கைவிட வில்லை. மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கலைஞர் ஆகியோருக்கு மாற்றாக தமிழக மக்கள் நடிகர் ரஜினிகாந்த்தை பார்த்தனர்.

இந்த நிலையில்தான் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார். அப்போது, ஏராளமான ரசிகர்கள் கடவுளின் வேண்டிக்கொண்டிருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெறவேண்டும் என்று… ரசிகர்களின் எண்ணப்படியே அவர் பூரண நலம் பெற்று வந்தாலும், பழையபடி அவரால் ஆக்டிவாக நடிக்க முடியவில்லை.

கலைஞர், ஜெயலலிதாவுக்கு மாற்றாக அவரால் அரசியல் களத்திலும் இறங்க முடியவில்லை. காரணம், உடல்நிலை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்… வருவார்… என்று எல்லோரும் எதிர்பார்த்தால்கள். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால், இந்நேரம் முதல்வராகியிருப்பார்.

ஆனால், அரசியல் என்பது சாதாணமல்ல… தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். பல்முனைத் தாக்குதல்களை சமாளிக்க வேண்டும். தனது உடல்நிலை, மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது ஆகியவற்றை யோசித்துதான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துவிட்டார்.

இதைத்தான் ஜெயிலர் பட ஆடியோ ரீலிசில் நடிகர் ரஜினி பேசியிருக்கிறார். ‘குடிப்பழக்கத்தால் எனது வளர்ச்சி பாதித்தது. இல்லாவிட்டால் எங்கேயோ போயிருப்பேன்’ என்பது, ‘நான் தமிழக முதல்வராகியிருப்பேன்’ என்பதைத்தான் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்’’ என்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் ‘குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும்’ என்று ரசிகர்களுக்கு சொன்னவுடன், அவரது போட்டோவில் சிலர் சத்தியம் பண்ணி குடிக்கமாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறார்கள். அந்த சபதத்தை நிறைவேற்றட்டும்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal