தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை எடப்பாடி தரப்பும், ஓ.பி.எஸ். தரப்பும் ஒருசேர எதிர்த்து வருவதை கண்கூடாக காண முடிகிறது. ‘எங்களுக்கு மோடி ஜி, நட்டா ஜி, அமித் ஷா ஜி இருக்காங்க… அண்ணாமலை ஜி யாரு?’ என்று கேள்வியெழுப்பினார் செல்லூர் ராஜு!

‘அரசியல் விஞ்ஞானி’யின் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என அண்ணாமலை செல்லூர் ராஜுவுக்கு பதிலடி கொடுத்தார்.

‘ஆடு உறவு… குட்டி பகை’ என்று அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி இருப்பது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக் கொடுக்குமா? தோல்வியைக் கொடுக்குமா? என்று அ.தி.மு.க.வினரே பேசிக்கொண்டிருக்கையில், சைலண்ட்டாக தி.மு.க. மறுபக்கம் காய் நகர்த்தி வருகிறது.

இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான மருது அழகுராஜ் வலைதள பக்கத்தல் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவை அவ்வளவு எளில் கடந்து விட முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மூன்றாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேற திட்டமிடும் பா.ஜ.க.. தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் அதிமுக ஒன்றுபடக் கூடாதென நினைக்கிறது.

வலுவான கூட்டணி பலத்துடன் முதலிடத்தில் இருக்கும் தி.மு.க.வும் பிளவு பட்ட நிலையில் தொடர்ந்து அதிமுக இருந்தால் மட்டுமே தஙகளுக்கு தொடர் தேர்தல் வெற்றி சாத்தியமாகும் என நினைக்கிறது.

இப்படி தி.மு.க.வும் பா.ஜ.க.வும் நினைப்பது போலவே.. எடப்பாடியும் அதிமுக ஒன்றுபடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பது ஏன்..?

ஆக.. ஒரு கட்சியின் பலவீனமான தலைவனை வளைத்து விட்டால் அந்த கட்சியையும் அக் கட்சித் தொண்டர்களது உழைப்பையும் எளிதாக வீழ்த்தலாம் எனும் புதியவகை அரசியல் கணக்கு தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டுள்ளது..!’’ என பதிவிட்டிருக்கிறார்.

பா.ஜ.க.வின் கணக்கை மருது அழகுராஜ் கணித்ததை அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கணிக்காதது ஏன்..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal