அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் முறையீட்டு மனு மீது தூத்துக்குடி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளிக்க உள்ளது.
தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக திமுக அரசு 2006-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2020-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.
கடந்த ஏப்.19-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில், இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கிய நிலையில், அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கியது.
இந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த 19-ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. முக்கிய ஆவணங்கள் இருப்பதால் இந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை ஏற்கெனவே தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை முறையீட்டு மனு மீது தூத்துக்குடி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவில் அமலாக்கத்துறை இணைந்தால், அனிதா ராதாகிருஷ்ணனின் அமைச்சர் பதவிக்கே ஆபத்து ஏற்படலாம் என்கிறார்கள்.