தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மதுபானங்களுக்கான விலையை உயர்த்துவது, டாஸ்மாக் விற்பனையில் மும்முரம் காட்டும் தமிழக அரசு, பள்ளி குழந்தைகளின் விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

சுமார் 200 குழந்தைகளின் படிப்பையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் தாலுகாவில் அச்சங்குன்றம் கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்ட தமிழக அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal