தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட 12 பேரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இந்த சொத்து பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் (28-ந்தேதி) ராமநாதபுரத்தில் இருந்து தொடங்குகிறார்.

உள்துறை மந்திரி அமித்ஷா இந்த பயணத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த பயணத்துக்கு முன்பாக தி.மு.க. பைல்ஸ் இரண்டாம் பாகம் வெளியிடப்படும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். தி.மு.க. பிரமுகர்களின் ஊழல் சம்பந்தமான பாகம் 2 தயாராக இருப்பதாகவும் அதில் 300-க்கும் மேற்பட்ட பினாமிகள் மூலமாக சொத்து குவித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தி.மு.க.வினரின் இந்த சொத்துப்பட்டியலை பொது வெளியில் வெளியிடுவதா? அல்லது கவர்னரிடம் தெரிவிப்பதா? என்பது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை சந்தித்தார். நாளை மறுநாள் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் கவர்னருடனான சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal