மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி எம்.பி., உள்ளிட்ட குடும்பத்தினர் மீது அவதூறாக பேசி பா.ஜ.க. தலைவர் கலிவரதனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேகதாது அணை விவகாரம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ஆறுகளில் தடுப்பணை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் விஏடி கலிவரதன் கலந்துகொண்டார். அப்போது அவர் தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் கனிமொழி குறித்து மிகவும் அவதூறாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக விக்கிரவாண்டி திமுக நகர துணைச் செயலாளர் சித்ரா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், திருக்கோவிலூர் அருகே மனம்பூண்டி பகுதியில் உள்ள கலிவரதனை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கலிவரதன் மீது 3 பிரிவுகள் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் கலிவரதன் இன்று அதிகாலை செய்து செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, கலிவரதன் மீது பா.ஜ.க.வினரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைத்த சம்பவமும் மறப்பதற்கில்லை..!