சென்னை திருமங்கலத்தில் மதுபோதையில் ஐ.டி. பெண் ஊழியருடன் நிர்வாணமாக தூங்கிய வனவரை போலீசார் கைது செய்திருப்பதுதான் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமங்கலம் பகுதியில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் தங்கியிருக்கிறார்.. இவருக்கு 26 வயதாகிறது.. இங்கு ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டே, அரசு வேலைக்காக படித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர் தன்னுடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.. நள்ளிரவு 2 மணிக்கு யாரோ தன் பக்கத்தில் இருப்பதை போல உணர்ந்தார். அதனால் கண்விழித்து பார்த்தபோது, பக்கத்திலேயே ஒருவர் உடம்பில் ஒட்டு துணியின்றி நிர்வாணமாக படுத்திருந்தார். அவரை பார்த்துமே அதிர்ந்துபோன அந்த பெண் கத்தி கூச்சல் போட்டார்.

இந்த அலறலை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்துவிட்டனர். இந்த பெண் சத்தம் போட்டும்கூட, அந்த நபர் படுத்து தூங்கி கொண்டேயிருந்தார். அக்கம்பக்கத்தினர் எல்லாம் திரண்டு வந்தும்கூட, அவர் தூங்கி கொண்டேயிருந்தார். பிறகு அனைவரும் சேர்ந்து அந்த நபரை எழுப்பினார்கள். கண்விழித்து பார்த்த நபர் திருதிருவென விழித்தார். யார் என்ன என்று அவரிடம் கேட்டனர்.

அப்போது, அவரது பெயர் பொன்னுசாமி. 51 வயதாகிறது. பொள்ளாச்சியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் வனவராக பணிபுரிந்து வருகிறார். ஈரோடு மாவட்டம் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்தவராம். தன்னுடைய சொந்தக்காரரின் மகனை, ஐஏஎஸ் அகாடமியில் சேர்த்து விடுவதற்காக சென்னை வந்திருக்கிறார். அப்போது திருமங்கலத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தும் தங்கியிருக்கிறார்.

இந்நிலையில், ‘சரக்கு’ அடித்துவிட்டு, நைட் மொட்டை மாடியில் அப்படியே படுத்து தூங்கியிருக்கிறார். பிறகு, சிறிது நேரம்கழித்து, மதுபோதையிலேயே எழுந்து வந்து, பக்கத்து அப்பார்ட்மென்ட்டில் தவறுதலாக இறங்கியதுடன், ஐடி பெண் ஊழியின் ரூமுக்குள் நுழைந்து, படுத்து தூங்கிவிட்டாராம். போதையில் தெரியாமல் இப்படி வந்துவிட்டதாக பொன்னுசாமி சொன்னார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஐடி பெண் ஊழியர், திருமங்கலம் போலீசாருக்கு புகார் தரவும், போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.. அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவாகியிருக்கிறது. இப்போது மிஸ்டர் பொன்னுசாமி கம்பி எண்ணிக் கொண்டு உள்ளார்.

தலைநகர் சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் ‘டாஸ்மாக்’ கடைகளை திறந்து வைத்து, சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை ‘நிதானம்’ இன்றி இருப்பதுதான் வேதனை அளிக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal