தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவரால் கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட முடியவில்லை. இதனால் கட்சியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தே.மு.தி.க. கூட்டணிக்கு அவசியம் என்று மற்ற கட்சிகள் எதிர்பார்த்த நிலையில் தற்போது “அவசியமா?” என்று நினைக்கும் நிலையில்தான் மற்ற கட்சிகள் பார்க்கின்றன.

கணவர் செயல்பட முடியாததால் தானே இந்த நிலை என்று பிரேமலதா விஜயகாந்த் கவலையில் ஆழ்ந்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் வேறு நெருங்கி வரும் நிலையில் கட்சியை இப்படியே விட்டால் சரிப்படாது என்று கருதுகிறார். எனவே நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் செயல் தலைவராக பிரேமலதா தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal