காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி ஈரோடு ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ். தென்னரசு, சிவசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கருப்பணன் எம்..எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காய்கறி விலைவாசி உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதில் முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் தங்கமுத்து, மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, மாணவர் அணி தலைவர் சிவக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோபால் கிருஷ்ணன், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன்ராஜா, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் துரை சக்திவேல், சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் பொன் சேர்மன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே.செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், முருகானந்தம், மாதையன், பிரதிநிதி கஸ்தூரி, சூரிய சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.