தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:- மணிப்பூரில் வன்முறை போர்வையில் பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தனை பேர் மத்தியில் பெண்களை அவமானப்படுத்தியதும், அதை பலர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனை அளிக்கிறது. ஒருவருக்கு கூட அந்த பெண்ணை காப்பாற்ற தோன்றவில்லை.

இந்த மாதிரி கொடுமைகளை அரசியல் ரீதியாக அணுகுவதைவிட மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். ஒரு நல்ல குடிமகனாக இந்த மாதிரி அவலங்கள் நடக்காமல் தடுக்க வழிகாண வேண்டும். இந்த கொடுமையை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் பெண்களை குறி வைத்து தாக்குகிறார்கள்.

பிரச்சினைகளுக்கும் பெண்களை அவமானப்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம்? நாட்டில் எந்த மூலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டு பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal