தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு அவரது மகன் டாக்டர் கவுதமசிகாமணி எம்.பி. வீடு உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தினார்கள்.
அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று இன்று அதிகாலை 3 மணி வரை விசாரணை மேற்கொண்டனர். இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கினர். அதன்படி இன்று ஆஜரானார்.
இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. பாட்னா கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. எதிர்க்கட்சிகளிடையே பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டம் அவசியம். ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதும் அவசியம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.