தி.மு.க.வில் கலைஞருக்குப் பிறகு கலை, இலக்கிய நயத்துடன் பேசக்கூடிய தலைவர், கனிமொழி எம்.பி.தான்! அப்படிப் பட்டிவரை தி.மு.க. தலைமை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் உஷ்ணத்தில் உள்ளனர்.

மதுரையில் பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முன்னதாக, கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதிக்கே முறையான அழைப்பு விடுக்கவில்லையாம்.

இது பற்றி கலைஞருடன் பயணித்த மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், கலை, இலக்கியத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர் கலைஞர் கருணாநிதி. இன்றைக்கு அவருக்கு அடுத்து கலை, இலக்கியத்தில் ஆதிக ஆர்வம் கொண்டிருப்பவர் அவரது மகள் கனிமொழி எம்.பி.தான்! கலைஞருடைய பேனாவின் மறுவடிவமே கனிமொழி எம்.பி.தான்! இந்த நிலையில், கலைஞர் பெயரில் கட்டிய பிரம்மாண்ட நுலகத்திற்கான அழைப்பிதழை கனிமொழியிடம் நேரடியாக வழங்கியிருக்கலாம்.

ஆனால், கனிமொழி எம்.பி. வீட்டின் முன்பு இருக்கும் பாதுகாவலரிடம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இதே போல்தான் தயாநிதி மாறனுக்கும் முறையாக அழைப்பிதழை கொடுக்கவில்லையாம்.

தமிழர்களின் பண்பாடு, கலை & இலக்கிய நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்திக் கொண்டிருக்கும் கனிமொழி எம்.பி.க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கியத்தும் கொடுப்பதை தவிர்க்கிறாரா? அல்லது தவிர்க்க வைக்கப்படுகிறாரா? என்பது புரியவில்லை.

மறைந்த முதல்வர் கலைஞர் இருக்கும்போது கனிமொழிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமே வேறு! இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட அந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். எனவே தலைவரின் மகளுக்கே இந்த நிலையா..?’’ என்று ஆதங்கத்துடன் முடித்தனர்.

கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்புவிழாவில் கனிமொழி புறக்கணிக்கப்பட்டதால், அன்றைய தினம் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்சிகளில் கூட கனிமொழி கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே இருந்துவிட்டாராம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal