பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பலமான கூட்டணியை அமைக்க பெங்களூரில் இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது.

இதில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியாகாந்தி, ராகுல்காந்தி, உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அதே போல பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ஒவ்வொரு தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் த.மா.கா.-பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு வந்திருந்தது.

இந்த அழைப்பை ஏற்று அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.அங்கு மாலையில் நடக்கும்தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டம் முடிந்ததும் டெல்லியில் தங்கும் அவர் நாளை காலை கோவை வழியாக சேலம் திரும்புவார் என தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal