கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 79 வயதாகும் உம்மன் சாண்டியின் மறைவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மோடி தனது இரங்கல் குறித்து டுவிட்டர் செய்தியில் ”மிகவும் எளிமையாக பழகக்கூடிய, தனது வாழ்நாள் முழுவதையும் மக்கள் சேவைக்காகவும், கேரளாவின் முன்னேற்றத்திற்காகவும் செலவிட்டவரை நாம் இழந்துள்ளோம். நாங்கள் இருவரும் அவரவர் மாநில முதல்வராகவும், நான் பிரதமரான பின், சந்தித்த நிகழ்வுகளை திரும்பி பார்க்கிறேன். அவரது குடும்பத்தினருடனும், ஆதரவாளர்களுடன் என்னுடைய எண்ணங்கள் இருக்கும். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ”ஒரே வருடத்தில்தான் நாங்கள் இருவரும் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டோம். மாணவர் வாழ்வில் இருந்து அரசியல் வாழ்வு வரை ஒரே நிலையில் இருந்தது. தற்போது அவரது பிரிவு மிகவும் வருதத்தை அளிக்கிறது. மக்கள் வாழ்வில் மிகவும் நெருக்கமாக இருந்தவர், திறமையான நிர்வாகி” எனக் குறிப்பிட்டுள்ளார்.