உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் சுமார் 7 மணிநேரமாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து வீடு திரும்பினார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் சோதனை நடைபெற்று வந்தது. சுமார் 20 மணிநேரம் நீடித்த சோதனை நிறைவு பெற்றது.

அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, அமலாக்கத் துறை விசாரணைக்காக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். ஆகையால், அமைச்சர் பொன்முடி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், அமைச்சர் பொன்முடியிடம் சுமார் 7 மணிநேரமாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து அதிகாலை வீடு திரும்பினார். மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று கிடைத்த ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு இன்று மீண்டும் விசாரணை நடக்க இருக்கிறது. விசாரணையின் முடிவில் பொன்முடியை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்த முகாந்திரம் இருந்தால், அதற்கும் ஆயத்தமாகி வருகிறார்களாம் அமலாக்கத்துறையினர்.

இன்று நடக்கும் விசாரணையில் அமைச்சர் பொன்முடி கைதாவாரா? அல்லது அடுத்தடுத்து விசாரணைக்கு மட்டும் உட்படுத்தப்படுவாரா? என்பது தெரிந்துவிடும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal