எதிர்க்கட்சிகளின் ஆலோசனை மாநாட்டிற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ள நிலையில், இன்று காலையில் இருந்து அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அவரது வீடு, அவரது மகன் வீடு, கல்லூரி, அறக்கட்டளை என பலவும் சிக்கியுள்ளது.

கடந்த மாதம் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஏழு பேர் கொண்ட அதிகாரி குழுவுடன் பாதுகாப்பு பணிக்காக, மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் பணியில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. காலை 7 மணி முதல் தீவிர சோதனை என கூறப்படுகிறது.

தற்போது சோதனை நடைபெறும் சென்னை இல்லத்தில் அமைச்சர் பொன்முடி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணியின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், சண்முகபுரம் காலனியிலுள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் இருகார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

காலை 7.30 மணியிலிருந்து நடைபெறுகிறது. அமைச்சர் பொன்முடி அவர்களின் மகன் கௌதம சிகாமணி எம்.பி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் ரெய்டால் விழுப்புரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal